1.5 மில்லியன் ரூபா செலவில் மின் ஒளி வசதியுடன் கூடிய கோறளைப்பற்று கும்புறுமுலை பொதுவிளையாட்டுமைதானம். மற்றும் ஆலயங்களின் புனரமைப்பிற்கான காசோலைகள்

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமாகிய கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தனவர்கள் எமது மாவட்டத்தில் உள்ள நகர மற்றும் கிராம புறங்களில் உள்ள இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தி ஆளுமைமிக்க எதிர்கால சந்ததியினை கட்டியெழுப்பும் முகமாக கல்வி, கலை, கலாச்சார, பொருளாதாரம் மற்றும் விளையாட்டு துறை சார்ந்து பல மேம்பாட்டு திட்டங்களை முன்னெடுத்துவருகின்றார்.

அதற்கிணங்க நேற்றைய தினம் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்ஷத்தின் நோக்கு நாடுபூராகவுமுள்ள கிராமிய விளையாட்டு மைதானங்களை புனரமைக்கும் தேசிய வேலைத் திட்டத்திற்கமைய கௌரவ தலைவர் சந்திரகாந்தனவர்கள் தனது சிபாரிசின் அடிப்படையில் 1.5 மில்லியன் ரூபா செலவில் மின் ஒளி வசதியுடன் கூடியதாக அமைக்கப்பட்ட கோறளைப்பற்று கும்புறுமுலை பொதுவிளையாட்டு மைதானத்தினை திறந்துவைத்ததுடன் அவரது பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாக ஆலயங்ககள் மற்றும் தேவாலயங்களின் புனரமைப்பிற்கான காசோலைகளையும் வழங்கிவைத்திருந்தார்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ