கோறளைப்பற்று தெற்கு மைலந்தனை மக்களின் குடிநீர்ப்பிரச்னைக்கு தீர்வாக 3 மில்லியன் ரூபா பெறுமதியான குடிநீர் வழங்கும் திட்டம்.
கோறளைப்பற்று தெற்கு மைலந்தனை பகுதியானது யுத்தத்தினால் அதிகம் பாதிப்புக்குள்ளாகி பொருளாதார மற்றும் உட்கட்டுமான ரீதியாக பெரிதும் பின்தங்கி காணப்படுகின்ற ஒரு கிராமமாகும். அந்த வகையில் அப்பிரதேச மக்களின் நீண்டகால பிரச்சினையாக இருந்து வந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமாகிய கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தனவர்கள் சமுதாய நீர் வழங்கல் அமைச்சின் ஊடாக 3 மில்லியன் ரூபா பெறுமதியான குடிநீர் வழங்கும் திட்டத்தினை நேற்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைத்திருந்தார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன், கிரான் பிரதேச செயலாளர் திரு ராஜ்பாபு , மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரின் செயலாளரும், மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமான சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர். சமுதாய நீர் வழங்கல் மாவட்ட பொறியியலாளர் திரு பிரதீபன் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ