உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் தும்பு உற்பத்தித் தொழிற்சாலை மற்றும் சௌபாக்கியா கடன் உதவி, நீர் இறைக்கும் இயந்திரங்கள்.
நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிராமிய உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவித்தல் தொடர்பாகவும் சுயபொருளாதாரத்தினை ஊக்குவிப்பது தொடர்பாகவும் பல வேலைத்திட்டங்களை சமீப காலமாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்னெடுத்து வருகின்றார்.
இதற்கமைய 12/07/2021 அன்று கோறளைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்க்குட்பட்ட வாழைச்சேனை நாசிவன் தீவு கிராமத்திலும் தும்பு உற்பத்தியில் ஆர்வம் உள்ளவர்கள் அதிகமாக காணப்படுவதனால் தும்பு உற்பத்தி தொழிற்சாலைக்கான அடிக்கல்லினை நட்டு அதன் வேலைகளையும் ஆரம்பித்து வைத்திருந்தார்.
அத்துடன் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்க்குட்பட்ட வாகரை கட்டுமுறிவு கிராமத்தினையும் உற்பத்திக் கிராமமாக வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்திருந்தார். உண்மையில் அப்பகுதியில் மண் வளமும் நீர் வளமும் ஒருமித்து காணப்படுவதனால் கௌப்பி, நிலக்கடலை போன்ற பயிர்செய்கைகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளார்.
இதன் போது பாரிய அளவான உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு சௌபாக்கிய திட்டத்தின் மூலமாக நீர் இறைக்கும் இயந்திரங்களையும் மேலும் சில கடன் உதவிகளையும் வழங்கி வைத்திருந்தார். இவ்வாறான உள்ளூர் உற்பத்தி மற்றும் சுய பொருளாதாரத்தினை கட்டி எழுப்புவதன் மூலம் எதிர்காலத்தில் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த ஒரு ஆரோக்கியமான வளமான சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் என்று அவ்விடத்தில் குறிப்பிட்டிருந்தார்.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ