தேசிய பாடசாலைகளை அறிமுகம் செய்யும் நிகழ்வு தொடர்பான கலந்துரையாடல்.
அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடு பூராகவும் பல பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக உருவாக்கும் திட்டத்திற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்திலும் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளை உத்தியோகபூர்வமாக தேசிய பாடசாலைகளாக அறிமுகம் செய்யும் நிகழ்வானது எதிர்வரும் ஜூன் மாதம் 10ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் மட் / மெதடிஸ்த மத்திய கல்லூரியில் எமது தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வானது கொரோனா சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு 20 - 30 பேர் வரையிலான அதிகாரிகளை உள்ளடக்கியதாக இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வு சம்பந்தமான ஏற்பாடுகள் தொடர்பாக நேற்றைய தினம் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்களான தர்மசேன மற்றும் வீரசிங்கே உட்பட மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம் நிஷாம் மற்றும் வலையக் கல்விப் பணிப்பாளர்கள் போன்றோருடன் Zoom வலையதளத்தின் ஊடாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ