படுவான் சமர் பருவகாலம் 14 !
கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டு கழகத்தின் படுவான் “சமர் பருவகாலம் 14” மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியானது அக்கழகத்தின் தலைவர் நீதிதேவன் தலைமையில் கொக்கட்டிச்சோலை குமரகுரு விளையாட்டு மைதானத்தில் நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இறுதி சுற்றில் வெற்றி பெற்ற அணியினருக்கான வெற்றிக்கேடயத்தினை வழங்கி கௌரவித்திருந்தார்.
மட்டக்களப்பு, காத்தான்குடி, படுவான்கரை உதைபந்தாட்ட சம்மேளங்களின் அனுமதியுடன் நடைபெற்ற இவ் உதைபந்தாட்ட சுற்று போட்டியின் இறுதிச் சுற்றில் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா மற்றும் தாண்டியடி ஸ்ரீ முருகன் அணிகள் மோதியிருந்தன. இதில் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா வெற்றி பெற்று "படுவான் சமர் பருவம் 14" இன் மகுடத்தை தனதாக்கியது. இச்சுற்றுப்போட்டியில் 3ம் இடத்தினை காஞ்சிரங்குடா நாகஒளி அணியினரும், 4ம் இடத்தினை களுமுந்தன்வெளி விநாயகர் அணியினரும் பெற்றுக்கொண்டனர்.
மேலும் சிறந்த விளையாட்டு வீரராக ஸ்ரீ முருகன் அணியின் கிளானன் அவர்களும். தொடர் ஆட்ட நாயகனாக ஈஸ்வரா அணி வீரர் தேவதர்ஷன் அவர்களும், சிறந்த கோள் காப்பாளராக ஈஸ்வரா அணி வீரர் வினோகாந் அவர்களும் தெரிவு செய்யப்பட்டிருந்ததோடு, சிறந்த நன்னடத்தை அணியாக களுமுந்தன்வெளி விநாயகர் விளையாட்டு கழகமும் தெரிவு செய்யப்பட்டிருந்தது.
அத்தோடு படுவான் சமர் 13 மற்றும் 14 என இரு சுற்று போட்டிகளிலும் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா அணியினர் தமது சொந்த மண்ணில் சம்பியனாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் சுதாகர், கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அபேரத்ன, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் அப்பிரதேச குழு செயலாளர் குகநாதன், உட்பட ஆலயங்களின் பரிபாலன சபையினர், உதைபந்தாட்ட சம்மேளனங்களின் தலைவர்கள், கிராம சேவகர்கள், கட்சியின் பிரதேச மற்றும் கிராமியக் குழு நிர்வாகிகள், கொக்கட்டிச்சோலை கிராம மட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ