மண்முனை பற்று பிரதேச செயலக பிரிவில் பாடசாலைகளின் விளையாட்டு மைதானங்களை புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்!
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் விசேட நிதி ஒதுக்கீட்டின் ஊடாக மண்முனை பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாடசாலை மைதானங்களை புனரமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வுகளானது அண்மையில் நடைபெற்றிருந்தது.
அந்த வகையில் கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலய மைதான புனரமைப்பு மற்றும் ஆரையம்பதி மகா வித்தியாலய விளையாட்டு மைதான பார்வையாளர் அரங்கு நிர்மாண பணிகள் என்பன அன்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.
குறித்த பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கத்தினர் கட்சியின் பிரதேச குழு ஊடாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூ.பிரசாந்தன் ஊடாக இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தன் அவர்களிடம் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இராஜாங்க அமைச்சரின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் மேற்படி அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
நிகழ்வில் கட்சியின் பிரதேச குழு தலைவர் ஜோசப் ஜேக்கப், செயற்குழு உறுப்பினர் பஞ்சாட்சரம், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கோகுலநாதன் பிரதேச குழு தொழிற்சங்க செயலாளர் கலைநேசன் உட்பட பழைய மாணவர் சங்கத்தினர் பாடசாலை அபிவிருத்தி சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ