எமது கட்சியின் உலக தொழிலாளர் தின நிகழ்வு 2024!

" உழைப்பால் ஒன்றிணைவோம்" எனும் தொனிப்பொருளிலான , எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிற்சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட மாபெரும் உலக தொழிலாளர் தின நிகழ்வானது மே மாதம் 01ம் திகதி அதாவது நேற்று முறக்கொட்டான்சேனை விளையாட்டு மைதானத்தில் பி.ப 4:00 மணி அளவில், எமது கட்சியின் தொழிற்சங்க செயலாளர் சோமசுந்தரம் தியாகராசா தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பத்து பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து கட்சியின் தொழிற்சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்திகள் சகிதம்,

களுவாஞ்சிக்குடி, வவுணதீவு, வாகரை பிரதேசங்களில் இருந்து ஆரம்பமான வாகன பேரணிகள் முறக்கொட்டான்சேனை மைதானத்தை வந்தடைந்தன.

அதனைத் தொடர்ந்து கொடிகள் ஏற்றப்பட்டு சம்பிரதாயபூர்வ நிகழ்வுகள் இடம்பெற்றதை அடுத்து, அதிதிகள் உரை இடம்பெற்று, அதனைத் தொடர்ந்து தொழிலாளர் கௌரவிப்பு நடைபெற்றது. இதன்போது வைரமுத்து சுரேஷ்குமார், அழகையா நாகமணி, நல்லதம்பி கந்தசாமி, புஷ்பராசா மோகன், கந்தையா அரிச்சந்திரன், முருகேசு தங்கநாதன், கணபதிப்பிள்ளை கிருபாகரன், வேலாயுதம் சிவலிங்கம், கணபதி கந்தையா, செல்லத்துரை மயில்வாகனம் போன்ற தொழிலாளர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தார்கள்.

மேலும் தொழிலாளர்களை கௌரவிக்கும் விதமாக கட்சியின் பிரதேச குழுக்களால் நிர்மாணிக்கப்பட்ட ஊர்திகளுக்கான வடிவமைப்பு அடிப்படையிலான தெரிவுப் போட்டி நடைபெற்றது.

இதன்போது இதற்கென நியமிக்கப்பட்ட கட்சியின் கல்வி கலை கலாச்சார செயலாளர் தலைமையிலான நடுவர் குழுவினால் 1ம் இடத்தினை பெற்ற ஊர்தியாக கோறளைப் பற்று தெற்கு கிரான் பிரதேசத்தில் இருந்து வருகை தந்திருந்த ஊர்தியானது தெரிவு செய்யப்பட்டிருந்ததோடு 2ம் இடத்திற்காக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிலிருந்து வருகை தந்திருந்த ஊர்தி தெரிவு செய்யப்பட்டது.

அதேபோன்று 3ம் இடத்திற்காக மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலிருந்து வருகை தந்திருந்த ஊர்தியானது தெரிவு செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது ..

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ