20வது சிவப்பு சித்திரை நினைவு தினம்-மாவட்ட ரீதியில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகள் !!!

வெருகல் மலை பகுதியில் நடந்த சகோதர படுகொலையின் போது கிழக்கின் தனித்துவமான இருப்பிற்காக மடிந்த மறவர்களை நினைவு கூறும் வெருகல் படுகொலை 20வது "சிவப்பு சித்திரை" நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் அணிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விளையாட்டு நிகழ்வுகளின் இறுதிப் போட்டிகள் சிவப்பு சித்திரை நினைவு தினமான ஏப்ரல் 10, 2024 அன்று வாகரை வம்மிவட்டுவான் மைதானத்தில் கட்சியின் வாகரை பிரதேசக் குழு தலைவர் மதிவேந்தன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு போட்டி நிகழ்வுகளை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்திருந்ததோடு போட்டிகளில் வெற்றியீட்டிய அணிகளுக்கான காசோலைகள், வெற்றிக் கேடயங்கள், பதக்கங்கள், போன்ற பரிசீல்களை வழங்கி கௌரவித்திருந்தார்.

இதன்போது வாகரைப் பிரதேச அணிகளுக்கு இடையில் நடைபெற்ற கரப்பந்தாட்ட இறுதிச் சுற்று போட்டி நிகழ்வில் பனிச்சங்கேணி இளம்புயல் விளையாட்டு கழகம் 1ம் இடத்தினையும் துச்சாக்கேணி அகர முதல்வன் விளையாட்டு கழகம் 2ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டன கால்பந்தாட்ட இறுதிப் போட்டியின் போது கோமத்தலாமடு சன்ரைஸ் விளையாட்டு கழகம் 1ம் இடத்தினையும் பால்சேனை துருசியஸ் விளையாட்டு கழகம் 2ம் இடத்தினையும் பெற்றுக் கொண்டன.

அதேவேளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதேசக் குழு கட்டமைப்பு ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பத்து பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட அணிகளுக்கு இடையில் இருந்து இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய போரதீவுப் பற்று மற்றும் கோறளைப் பற்று கிரான் பிரதேச அணிகளுக்கிடையிலான எல்லே இறுதிப்போட்டியின் போது போரதீவுப் பற்று பிரதேச அணி 01ம் இடத்தினையும் கோறளைப் பற்று கிரான் பிரதேச அணி 02ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டன. அதேபோன்று கிரிக்கெட் இறுதிச் சுற்று போட்டியின் போது ஏறாவூர் பற்று கிரான் பிரதேச அணி 01ம் இடத்தினையும் கோறளைப் பற்று பிரதேச அணி 02ம் இடத்தினையும் பெற்றுக் கொண்டன.

இவ் விளையாட்டு நிகழ்வுகளின் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் பிரதம பொருளாளர் ஆ.தேவராசா பிரதிச் செயலாளர் இணைப்பாக்கம் சந்திரகுமார், தேசிய அமைப்பாளர் தஜுவரன், மாவட்ட அமைப்பாளர் அருன் திருநாவுக்கரசு, இளைஞர் அணி செயலாளர் சண்முகலிங்கம் சுரேஷ்குமார் உட்பட தலைவர் பணிக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பிரதேச குழு நிர்வாகிகள், கிராமிய குழு நிர்வாகிகள் விளையாட்டு அணிகளின் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ