ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் தேர்தல் காரியாலயம் மட்டக்களப்பில் திறந்து வைப்பு!

நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாணத்தின் முதலாவது தேர்தல் காரியாலயம் மட்டக்களப்பு நகரில் திறந்து வைக்கப்பட்டிருந்தது!

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் இளைஞர் அணி செயலாளரும் இக் காரியாலயத்திக்கான இணைப்பாளருமான சண்முகலிங்கம் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அலுவலகத்தினை வைபவ ரீதியாக திறந்து வைத்திருந்தார்.

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கான வெற்றியை உறுதிப்படுத்தும் தேர்தல் முன்னெடுப்புக்களின் பிரதான தலைமை காரியாலயமாகவும், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஏனைய ஆதரவு வழங்கும் கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தல் செயற்பாடுகளை செயற்படுத்தும் பிரதான அலுவலகமாகவும் இது செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் உள்ளிட்ட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சுதர்சன் உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ