பீலிமடு கிராமிய பாலம் புனரமைப்பு!

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களின் கருத்திட்டத்திற்கமைவாக நீர்ப்பாசன அமைச்சின் காலநிலை மாற்றத்தை எதிர் நோக்குவதற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி நிரல் அணுகுமுறை நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக உலக வங்கியின் நிதி அனுசரனையுடன் கோறளைப் பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பூலாக்காடு கிராம சேவகர் பிரிவில் சுமார் 14.4மில்லியன் செலவில் விவசாய நடவடிக்கைகளுக்கு மிகவும் அத்தியாவசியமானதும் பருவ மழை காலங்களில் தடைப்படும் பிரதான போக்குவரத்து மார்க்கமாகவும் காணப்படும் பீலிமடு கிராமிய பாலத்தின் (அணைக்கட்டு) கட்டுமான பணிகளை இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்திருந்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய நீர்ப்பாசன பணிப்பாளர் என்.நாகரெத்தினம் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதம பொருளாளர் ஆ.தேவராஜ், கட்சியில் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் திருநாவுக்கரசு நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், கட்சியின் பிரதேச மற்றும் கிராமிய குழு நிர்வாகிகள் உட்பட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ