களுவாஞ்சிகுடி நகர் பகுதியில் போக்குவரத்து சமிக்ஞை விளக்கு பொருத்துவதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு!

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களின் கருத்திட்டத்திற்கு அமைவாக 18 மில்லியன் செலவில் போக்குவரத்து சமிக்ஞை விளக்கு பொருத்துவதற்கான அங்குரார்ப்பண நிகழ்வானது கட்சியின் களுவாஞ்சிக்குடி பிரதேச குழு தலைவர் சிவபாலன் சசிகரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பட்டிருப்பு தனித்தமிழ் தொகுதியில் எதிர்கால நகர மயமாக்கல் திட்டத்தின் அடிப்படையில் களுவாஞ்சிகுடி மற்றும் பட்டிருப்பு பிரதேசத்தை மையப்படுத்தி வீதிகள் வடிகான்கள் மற்றும் ஏனைய உட்கட்டுமான பணிகள் முதன்மை அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது, இந்நிலையில் களுவாஞ்சிக்குடி நகரின் மத்தியில் அமைந்துள்ள நாற்சந்தியில் போக்குவரத்து சமிக்கை விளக்குகள் பொருத்தும் பணிகளானது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களின் அழைப்பையேற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விசேட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன மற்றும் இராஜாங்க அமைச்சர் இணைந்து ஆரம்பித்து வைத்திருந்தனர்.

இந்நிகழ்வில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் திரு. ரஞ்சித் ரூபசிங்க, கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. ஜீவானந்தம், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் திரு. சூரிய பண்டார, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சமிந்த அத்துலுவகே, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் திரு. சிவகுமார்,மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் திரு.பரதன், நிறைவேற்று பொறியியலாளர் திரு. லிங்கேஸ்வரன், கட்சியின் பொதுச் செயலாளர் பூ. பிரசாந்தன், பிரதம பொருளாளர் ஆ.தேவராசா,தேசிய அமைப்பாளர் தஜீவரன், களுவாஞ்சிக்குடி கிராம தலைவர் கந்தவேல், பட்டிருப்பு கிராம தலைவர் குணபாலன், வர்த்தக சங்க தலைவர் அற்புதராசா உட்பட கட்சியின் தலைவர் பணிக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், பிரதேச மற்றும் கிராமிய குழு நிர்வாகிகள், கிராம மட்ட அமைப்புகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ