வண்ணக்கர் கண்டத்தில் அறுவடை விழா!

வந்தாறுமூலை கமநல சேவை நிலைய பிரிவிற்குட்பட்ட வண்ணக்கர் கண்டத்தில் மேலதிக வடிச்சல் நீர் ஊடாக மேற்கொள்ளப்பட்ட சிறுபோக நெற்செய்கை அறுவடை விழா நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் அவ்விவசாயிகளின் அழைப்பையேற்று கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் கலந்து சிறப்பித்திருந்தார்.

மேற்படி நீர்ப்பாசன திட்டத்தின் ஊடாக சிறுபோக செய்கைக்காக 145 ஏக்கர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அப்பிரதேச விவசாயிகளின் கோரிக்கையின் அடிப்படையில் மேலதிக வடிச்சல் நீர் ஊடாக குறித்த விவசாய கண்டத்தில் மேலும் 225 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதற்கான அனுமதிகளை இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தன் பெற்றுக் கொடுத்திருந்தார்.

அதன் அடிப்படையில் விவசாயிகளால் சிறுபோக நெற்செய்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு அமோக விளைச்சல் ஏற்பட்டுள்ள நிலையில். அவ்விவசாய கண்டத்தின் அறுவடை விழாவானது தமிழர் பாரம்பரிய கலாசார முறைப்படி நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது மாகாண நீர்ப்பாசன பிரதிப்பணிப்பாளர் பிரதீபன், கட்சியின் மாவட்ட அமைப்பாளர் அருண் திருநாவுக்கரசு, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் லோகிதராசா, செங்கலடி பிரதேச நீர்பாசன தொழில்நுட்ப உத்தியோகத்தர், கிரான் கமநல கேந்திர நிலைய குழுக்களின் தலைவர் திரு. செந்தில்நாதன் மியான்கல் விவசாய அமைப்பு தலைவர் சிவகுமார், இலுக்குப்பொத்தானை விவசாய அமைப்பு தலைவர் செல்லத்தம்பி, கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், விவசாயிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டன

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ