கௌரவ தலைவர் அவர்களின் போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிராமங்களுக்கான விஜயத்தின் போது....

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவு பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிராமங்களுக்கு மிக நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்றைய தினம் கௌரவ தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் விஜயம் செய்து அங்கு இருக்கின்ற நிலைமைகளை அவதானித்துடன் அங்குள்ள மக்களின் குறைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

அங்கு அவர் குறிப்பிடுகையில் "தற்போது எமது நாட்டில்நிலவக்கூடிய கொவிட்  தொற்றுதல் நிலைமை காரணமாகவும் அரசாங்கத்தினுடைய பொருளாதார நிலைகாரணமாகவும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை உடனடியாக முன்னெடுக்க முடியாத பொழுதும் அங்குகாணப்படுகின்ற பிரச்சினைகளையும் தேவைகளையும் இனம் கண்டு அவற்றை குறுகிய காலத்தில் தீர்த்தகூடியவை நீண்ட காலத்திற்கு தீர்க்கக் கூடியவை என்று தரம் பிரிப்பதன் ஊடாக கட்டங்கட்டமாக அவர்களது பிரச்சனைகளை முடிந்த அளவு தீர்த்து கொடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு தனக்கு இருப்பதாகவும். அதுமட்டுமில்லாமல் அங்கு சென்றிருந்த தனக்கு மக்கள் அளித்திருந்த அன்பையும் ஆதரவையும் பார்க்கின்ற பொழுது  மிகவும் சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் அளித்ததாகவும் தான் இன்னும் அந்த மக்களுக்காக அதிக மணி நேரம் வேலை செய்யவேண்டும் மற்றும் அவர்களது பிரச்சினைகளை முடிந்த அளவு தீர்க்க வேண்டும் என்கின்ற உள் உணர்வினையும் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்''.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ