38 மில்லியன் செலவில் கோறளைப்பற்று தெற்கு கிரான்பிரதேச செயலக பிரிவில் வீதிகள் செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிப்பு

மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யும் வீதிகளை முன்னுரிமைப்படுத்தி கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் அவர்கள் இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் செப்பனிட்டு மக்கள் பாவனைக்கு கையளித்து வருகின்றார் .

அந்தவகையில் கோறளைப்பற்று தெற்கு கிரான்பிரதேச செயலக பிரிவில் சுமார் 38 மில்லியன் செலவில் செட்டியார் குடியிருப்பு வீதி,பாரதி வீதி, வீட்டுத்திட்ட 1ம் குறுக்கு வீதி, நெல்லுச்சேனை 1ம் குறுக்கு வீதி, பாலையடித்தோணா, 1ம் 2ம், 4 ம் மற்றும் ஜீ.எஸ் குறுக்கு வீதிகள், சுனாமி வீட்டுத்திட்டம், வட்டத்தாளை பிள்ளையார் வீதி, 2ம் குறுக்கு ஜீவாபுரம் எல்லை, விநாசியார் வீதி, சவக்காலை வீதி, எல்லை வீதி 2ம் குறுக்கு, நாவலடி உள் வீதி 2ம் குறுக்கு, நட்பு வீதி 2ம், 3ம் குறுக்கு பாலையடித்தோணா, போன்றன செப்பனிடப்பட்டு இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் அவர்களினால் இன்றையதினம் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டிருந்தது.

இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் J.J முரளிதரன், பிரதேச செயலாளர் K.சித்திரவேல், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் சிவநேசராஜா மற்றும் நிர்மல்ராஜ், மாவட்ட செயலக பொறியியலாளர் D.சுமன், தொழில்நுட்ப உத்தியோகத்தர் சுப்பிரகாந்தன், சதீஷ்குமார், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பிரதம பொருளாளர் ஆறுமுகம் தேவராஜ், தேசிய அமைப்பாளரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் தனிப்பட்ட செயலாளருமான தம்பிராஜா தஜீவரன், மாவட்ட அமைப்பாளர் நவரெத்தினம் திருநாவுக்கரசு, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் S. மணிசேகர், பிரதேச குழுத் தலைவர் புவனேந்திரன், பிரதேச வேட்பாளர் K.கணேசன் உட்பட துறைசார் அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள் ,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ