தாயாக கரங்கொடுப்போம் செயற்திட்டத்தினூடாக சத்துருகொண்டான், செளபாக்கியா வீட்டுத்திட்டம், கொக்குவில், அமிர்தகழி போன்ற கிராமசேவகர் பிரிவுகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளீர் அணியினால் கட்சியின் கிராமிய குழு உறுப்பினர்களுடன் இணைந்து  கடந்த 5ம் மற்றும் 6ம் மாதங்களில் முன்னெடுத்த ஒருங்கிணைந்த தீர்மானத்திற்கு அகமைவாக கடந்த கால யுத்தம் மற்றும் அதன் பின் எழுந்த உலகளாவிய கொவிட்தொற்று அதனுடன் இணைந்த பொருளாதார நெருக்கடி, பொருட்களின் விலையேற்றம் போன்ற காரணிகளால் 2024ம் ஆண்டு புதிய வகுப்பில் காலடியெடுத்து வைக்கும் தமது பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்து வழங்குவதில் சவால்களை எதிர்கொள்ளும் தாய்மார்களுக்கு அவர்களின் பிள்ளை செல்வங்களுக்கான கற்றல் உபகாரங்களை கொள்வனவு செய்து வழங்கும் முகமாக அத் தாய்மார்களுடன் தாயாக நின்று கரம் கொடுப்போம் எனும் தொனிப்பொருளில் குறித்த செயற்திட்டமானது அண்மையில்  ஆரம்பிக்கப்பட்டு கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் நேற்றையதினம் சத்துருகொண்டான், செளபாக்கியா வீட்டுத்திட்டம், கொக்குவில், அமிர்தகழி போன்ற கிராமசேவகர் பிரிவுகளில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மகளீர் அணியின் ஏற்பாட்டிலும் கட்சியின் மகளீர் அணிச்செயலாளர் சுசிகலா அருள்தாஸ் தலைமையிலும் குறித்த கற்றல் உபகரணங்கள் மற்றும் அப்பியாச கொப்பிகள் போன்றன வழங்கிவைக்கப்பட்டது.

இதன்போது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பெரிய ஊறணி மகளீர் அணிச் செயலாளர் சாரதாதேவி உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ