இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை நேரில் சென்று பார்வையிட்ட பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன்

நாட்டில் பெய்துவரும் அடைமழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்ற நிலையில் ஏறாவூர்ப்பற்று எல்லைநகர் கிராமத்தில் இருக்கின்ற மக்களின் வீடுகளுக்குள் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக வெள்ளம் புகுந்து போக்குவரத்து தடைப்பட்ட நிலையில் மாஞ்சோலை மணி மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அம் மக்களை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களின் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.

அத்துடன் அவர்களுக்கான சமைத்த உணவுப்பொருட்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் பிரதேச செயலாளருடன் இணைத்து முன்னெடுத்திருந்தனர். இதன்போது கிராம சேவையாளர் கோகுலன், பொருளாதார உத்தியோகத்தர், ஆலய தலைவர்கள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ