கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா - 2022, 2023
மட்டக்களப்பு கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா நேற்றையதினம் வித்தியாலய அதிபர் T.அருமைத்துரை தலைமையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து பல்வேறு துறைகளிலும் குறிப்பாக கல்வி மற்றும் விளையாட்டு துறைகளில் தமது சாதனைகளை வெளிப்படுத்திய மாணவர்களை கெளரவித்து சான்றிதழ்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள், பதக்கங்களை வழங்கி வைத்ததுடன் மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்வுகளையும் கண்டு கழித்திருந்தார். அத்துடன் பாடசாலை சமூகம் நீண்ட காலமாக எதிர்நோக்கி வந்த காணி பிரச்சனைக்கான தீர்வும் இராஜாங்க அமைச்சர் தலைமையில் அண்மையில் எட்டப்பட்டிருந்தது.
இதன்போது வித்தியாலய அதிபர் இராஜாங்க அமைச்சருக்கு பொன்னாடை அணிவித்து வருடாந்த பரிசளிப்பு விழா மலர் நூலினையும் கையளித்து கெளரவித்திருந்தார்.
குறித்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூ.பிரசாந்தன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் V.வாசுதேவன், பிரதி கல்விப் பணிப்பாளர் நிர்வாகம் S.ரவிராஜ், உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆரம்பப்பிரிவு U.விவேகானந்தம், உதவிக் கல்வி பணிப்பாளர் தமிழ் பிரிவு A .J.பிரபாகரன்,வைத்திய கலாநிதி கவிசங்கரி ஜெயலோகைன்றன் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ