சுவிஸ் கிராம நினைவாலய வீதி சுமார் 15 மில்லியன் செலவில்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திரகாந்தனின் பணிப்புரைக்கமைவாக இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட 300m நீளமான சுவிஸ் கிராம நினைவாலய வீதியானது சுமார் 15 மில்லியன் செலவில் கொங்கிறீட் வீதியாக செப்பனிடப்பட்டு அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகைதந்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத் துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மற்றும் இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் போன்றோரால் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

இதன்போது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வாசுதேவன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர் பரதன், நிறைவேற்று பொறியியலாளர் லிங்கேஸ்வரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூ.பிரசாந்தன், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் ஈஸ்வரராஜா, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் சுரேஷ்குமார், தொகுதி அமைப்பாளர் யுவநாதன், பிரதேசக் குழுத் தலைவர் காந்தராஜா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ