கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவில் 15 வீதிகள் மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திரகாந்தனால் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் உட்கட்டுமான பணிகளின் தொடர்ச்சியாக அண்மையில் 28.5 மில்லியன் செலவில் ஆரம்பிக்கப்பட்ட 15 கிரெவல் வீதிகள் மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது.
அதற்கமைய கோறளைப்பற்று வாழைச்சேனை சுங்காங்கேணி கிராமசேவையாளர் பிரிவில் புனரமைக்கப்பட்ட 4ம் குறுக்கு நாகதம்பிரான் கோவில் வீதி , பங்களா வீதி 1ம், 2ம், 3ம், 4ம் குறுக்கு வீதிகள் என்பனவும் வம்மியடி வீதி 1ம், 2ம், 3ம், 4ம் குறுக்கு வீதிகளும் சுங்காங்கேணி மேற்கு எல்லை வீதி, நாகதம்பிரான் கோவில் 2ம் மற்றும் 3ம் குறுக்கு வீதிகள் , முருகன் கோவில் வீதி, விவசாய வீதி 1ம் குறுக்கு, பாரதி வீதி என்பனவும் சுமார் 28.5 மில்லியன் செலவில் கிரெவல் வீதிகளாக செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டிருந்தது.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ