கனரக வாகன சாரதிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட கனரக வாகன சாரதிகளுக்கான பயிற்சி நெறிகள் நிறைவுற்ற நிலையில் அவர்களுக்கான சான்றிதழ்களினை இன்றைய தினம் இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் வழங்கி வைத்திருந்தார்.

இளைஞர் யுவதிகளுக்கான தொழில்வாய்ப்பின்மை காரணமாக பல சமூகமட்ட பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளமையினை கருத்திற்கொண்டு அவர்களுக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில்வாய்ப்பினை அதிகரிக்கும் முகமாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன் அவர்கள் குறித்த விசேட பயிற்சி நெறிகளை பெருந்தெருக்கள் அமைச்சினூடாக AMCOR நிறுவனத்தின் அனுசரணையுடன் அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் Dr பந்துல குணவர்த்தன்அவர்களுடன் இணைந்து வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழுள்ள திருப்பெருந்துறை வேலைத்தளத்தில் ஆரம்பித்து வைத்திருந்தார்.

அதற்கிணங்க குறித்த பயிற்சி நெறிகள் தற்பொழுது நிறைவுற்ற நிலையில் அவர்களுக்கான

தொழிற்தகைமை சான்றிதழ்களை இன்றையதினம் இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கி வைத்திருந்தார்.

குறித்த நிகழ்வின் போது மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண பணிப்பாளர் திரு. K சிவகுமார், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.வ.வாசுதேவன், கிராமியவீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் இணைப்பு செயலாளர் மாணிக்கவாசகர் தயாபரன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர் எந்திரி.பரதன், நிறைவேற்று பொறியியாலாளர் எந்திரி A.லிங்கேஸ்வரன், இலங்கை கட்டட நிர்மான அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் பிரதம பொறியியலாளர் எந்திரி.N.பிரகலாதனன், AMCOR நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் திரு.ப.முரளிதரன், மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு. R.ஜதீஸ்குமார், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் பிரத்தியேக செயலாளர் தம்பிராஜா தஜீவரன், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் திருநாவுக்கரசு, நிருவாக உத்தியோகத்தர் திரு. K.மதிவண்ணன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், AMCOR நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், பயிற்சியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ