கிரான் கிழக்கு கிராம சேவகர் பிரிவில் சுமார் 90 லட்சம் செலவில் 775 m நீளமான கிறவல் வீதி செப்பனிடும் பணிகள் ஆரம்பம்
கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் அவர்கள் தனது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சினூடாக அப்பிரதேசத்திற்கென ஒதுக்கீடு செய்த 10 கோடிக்கும் அதிகமான நிதியினைக் கொண்டு மணல் வீதிகள் அனைத்தையும் கிறவல் வீதிகளாக செப்பனிடும் பணிகளை கட்டம் கட்டமாக முன்னெடுத்து வருகின்றார்.
விவசாயம், மீன்பிடி மற்றும் அதனுடன் இணைந்ததாக சுயதொழிலினை விருத்தி செய்வதற்கு பங்களிப்பு செய்யும் கிராமிய வீதிகளை இனம்கண்டு செப்பனிடும் பணிகளை துரிதகதியில் இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் கிரான் கிழக்கு கிராம சேவகர் பிரிவிலும் 90 லட்சம் செலவிலான 775 m நீளம் கொண்ட கிராமிய வீதியினை செப்பனிடுவதற்கான ஆரம்ப பணிகளை இராஜாங்க அமைச்சர் அண்மையில் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்திருந்தார்.
குறித்த வீதிக்கான ஆரம்ப பணிகளின் போது உதவித் திட்டமிடல் பணிப்பாளர், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பிரதம பொருளாளர் ஆறுமுகம் தேவராஜ், மட்டகளப்பு மாவட்ட அமைப்பாளர் நவரெத்தினம் திருநாவுக்கரசு உட்பட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள், பிரதேச மட்ட குழு தலைவர்கள், பொது மக்களென பலரும் கலந்து கொண்டனர்.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ