SKO கராத்தே நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட கராத்தே சுற்றுப் போட்டி.

தேசிய மட்ட கராத்தே போட்டியில் பங்குபற்றும் மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக SKO கராத்தே நிறுவனத்தின் ஏற்பாட்டிலும் அதன் தலைவரும் பிரதம போதன ஆசிரியருமான K.T. பிரகாஷ் அவர்களின் தலைமையிலும் கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் குறித்த இக் கராத்தே போட்டி நிகவானது இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கி வைத்து வீரர்களை உற்சாகப்படுத்தியிருந்தார், அத்துடன் சர்வதேச ரீதியில் மலேசியாவில் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் முதலிடத்தை தன்வசப்படுத்தி மாவட்டத்திற்கும் நாட்டிற்கும் பெருமைசேர்த்த கராத்தே வீரன் R.ரதனை இராஜாங்க அமைச்சர் பொன்னாடை போர்த்தி கெளரவித்து நினைவுச்சின்னத்தையும் வழங்கிவைத்திருந்தார்.

இதன்போது கிழக்கு மாகாண நிர்வாக செயலாளர் கோபாலப்பிள்ளை, மாவட்ட அரசாங்க அதிபர் கலாநிதி பத்மராஜா, வலயக் கல்வி பணிப்பாளர் மட்டக்களப்பு சுஜாதா குலேந்திரகுமார், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வாசுதேவன், செங்கலடி பிரதேச செயலாளர் தனபாலசிங்கம் , வவுணதீவு பிரதேச செயலாளர் சுதாகர் உட்பட வீர வீராங்கனைகள் பொதுமக்கள் ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ