19வது கொட்டாவை படுகொலை நினைவு நாள்
ஒன்றாகவே உணவருந்தி, கதைகள்பேசி, ஒன்றாகவே படுத்துறங்கி, ஒன்றாகவே களமாடி வீரச்சமர்கள் பல புரிந்து வீர வரலாறுகளைப் படைத்த கிழக்குப் போராளிகளை நஞ்சுட்டி நயவஞ்சகமாக கொலை செய்து 19 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் அந்த வீர மறவர்களை நினைவுகூரும் முகமாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ சிவ .சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் கட்சியின் பிராந்திய காரியாலயத்தில் நேற்றையதினம் மாலை 5 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .
இற்றைக்கு 19 வருடங்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கிடையில் மாபெரும் பிளவொன்று தோற்றம் பெற்றதைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 6000 போராளிகள் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து வெளியேறி இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முயன்று வெளிநாடுகளுக்காவது ஓடித் தப்புவோமென்றெண்ணி கொழும்பின் புறநகர் பகுதிகளுள் ஒன்றான கொட்டாவை எனும் இடத்தில் தஞ்சமடைந்திருந்தவேளை அதனை அறிந்து உணவிலேயே நஞ்சு கலந்து அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திப் படுகொலை செய்தநாளைத்தான் கொட்டாவை படுகொலை நினைவு நாளாக நினைவுகூறுகின்றோம்.
இதன்போது கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன், பிரதிச் செயலாளர் நிர்வாகம் வயிரமுத்து பஞ்சலிங்கம், பிரதிச் செயலாளர் இணைப்பாக்கம் யோகராசா சந்திரகுமார், பிரதம பொருளாளர் ஆறுமுகம்
தேவராஜ், தேசிய அமைப்பாளர் தம்பிராஜா தஜிவரன், மகளிர் அணி செயலாளர் சுசிகலா அருள்தாஸ், கல்வி, கலை, கலாசார செயலாளர் சந்திரசேகரன் மணிசேகரன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், செயற்குழு உறுப்பினர்கள், உறவுகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ