நீரியல் உயிரினவளர்ப்பினை மேம்படுத்தும் முகமாக மீனவர்களின் கோரிக்கையினை ஏற்று இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் களவிஜயம்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கல்லாறு வாவியில் நன்னீர் மீன் வளர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் அவர்கள் களவிஜயத்தினை மேற்கொண்டு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு அவற்றிற்கான தீர்வினை ஈட்டும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்.

நாட்டினுடைய பொருளாதாரத்தில் மிகப் பிரதான பங்கு வகிக்கும் உற்பத்தி துறைகளில் நன்னீர் உயிரின வளர்ப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது அந்தவகையில் கல்லாறு வாவியில் நன்நீர் மீன் வளர்ப்பினை மேற்கொள்ளும் கோட்டைக்கல்லாறு, ஓந்தாச்சி மடம், மகிளூர் முனை போன்ற பிரதேசங்களை சேர்ந்த மீனவர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டதுடன் மீன் வளர்ப்பதற்கான அனுமதியினை பெறுவதில் மீனவர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராய்ந்திருந்தார். அதன்போது நன்னீர் மீன்வளர்ப்பில் ஆர்வமுடைய மீனவர்கள் மற்றும் இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் அம் மீன்களுக்கான தீன் உற்பத்தி தொழிற்சாலையினை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் அதனை விஸ்தீரனபடுத்துவது தொடர்பிலும் மீனவர்களின் வேண்டுகோளுக்கமைய சோலார் மின்குமிழ் பொருத்துவது தொடர்பிலும் முனைப்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் அண்மையில் இராஜாங்க அமைச்சரின் பணிப்புரைக்கு அமைவாக இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாணத்திற்குரிய கரையோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் மற்றும் கண்காணிப்பு பிரிவினால் மாவட்ட அபிவிருத்திக்குழுவினூடாக நன்னீர் மீன் வளர்ப்பினை மேற்கொள்ளும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவர்களை ஊக்குவிக்கும் முகமாக சுமார் 250, 000 பெறுமதியான காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி.வில்வரெட்ணம் சிவப்பிரியா, மீன்பிடி திணைக்கள உதவிப்பணிப்பாளர் ருக்ஸான் குரூஸ், நக்டா நிறுவனத்தின் உதவிப்பணிப்பாளர் ரவிக்குமார், மண்முனை தென் எருவில் பற்று உதவித்திட்டமிடல் பணிப்பாளர் நிருமல், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் பிரத்தியேக செயலாளர் த. தஜீவரன் உட்பட துறைசார் அதிகாரிகள், மீனவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் - 2024 தேசிய ரீதியில் நாடு முழுவதும் 22 தேர்தல் மாவட்டங்களிலும் பிரச்சார நடவடிக்

உலக வங்கியின் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக புனரமைக்கப்படவுள்ள வீதிகளின் பணிகளை

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான

தபால் மூல வாக்குகளை நாட்டின் சிறந்த தலைமைத்துவத்தை உருவாக்க வழங்க முன்வருமாறு அரச உத்தியோகத

அம்பாறை மல்வத்தை விபுலானந்த விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்து நடத்தியிருந்த மென்பந்து கிரிக்கெட் சு

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான