முனைக்காடு இராமகிருஷ்ணா விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட உறவுகளின் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்று போட்டி -2023
முனைக்காடு இராமகிருஷ்ணா விளையாட்டுக்கழகம் தமது 54வது ஆண்டினை சிறப்பிக்கும் முகமாக நடத்தப்பட்ட உறவுகளின் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்று போட்டியானது அக்கழகத்தின் தலைவர் பு.தனராசா தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் படுவான்கரை உதைப்பந்தாட்ட சம்மேளனம் போன்றவற்றிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 36 கழகங்கள் குறித்த சுற்றுப்போட்டியில் பங்கு பற்றி இருந்தபோதிலும் மிகச் சிறப்பாக தமது திறமைகளை வெளிக்காட்டிய இராமகிருஷ்ணா விளையாட்டுக்கழகம் மற்றும் மகிழடித்தீவு மகிழை இளைஞர் விளையாட்டு கழகம் ஆகிய இரு கழகங்களும் இறுதிப் போட்டியில் பங்கு பற்றி இருந்த போதிலும் இராமகிருஷ்ணா விளையாட்டுக்கழகம் ஒன்றுக்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில் முதலிடத்தை தட்டிச்சென்றதுடன் உறவுகளின் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்று போட்டி-2023 ற்கான சம்பியனாக தெரிவு செய்யப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்
இதன்போது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வெற்றி பெற்ற விளையாட்டு கழகங்களுக்கு வெற்றி கிண்ணங்களையும் பணப்பரிசல்களையும் வழங்கி கௌரவித்திருந்தார்.
மேற்படி நிகழ்வின் போது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் இணைப்பு செயலாளருமான கௌரவ. பூ.பிரசாந்தன், கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,பாடசாலை அதிபர்கள், சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ