மட்/முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலய நூற்றாண்டு விழா.
மூன்று நாட்கள் இடம்பெற்ற மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்/முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலய நூற்றாண்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. இதன் போது பாடசாலை மட்டத்தில் இடம்பெற்ற கல்வி, கலை, கலாசார, விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றியதுடன் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள், பதக்கங்கள், நினைவுச் சின்னங்கள் போன்றவற்றையும் வழங்கி வைத்திருந்தோம்.
இதன் போது மட்/முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலய அதிபர் நூற்றாண்டு விழா நினைவு மலர் "விவேகம் " என்ற நூலினையும் எமக்கு கையளித்திருந்தார்.
வித்தியாலய அதிபர் M.சாத்தியநாயகம் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த நிகழ்வில் சிவஸ்ரீ.மானாகப் போடி குருக்கள், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. கோவிந்தன் கருணாகரன், கிழக்கு மாகாண மாகாணக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் , கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் M.செல்வராசா, சட்டத்தரணி மங்களா சங்கர் உட்பட உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், வலயமட்ட பாடசாலை அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஓய்வுநிலை அதிபர்கள், அரச அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ