அம்பாறை மண்ணில் புத்தாண்டை முன்னிட்ட மாபெரும் கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள்.
சித்திரை புத்தாண்டை முன்னிட்ட கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள் அம்பாறை மண்ணின் காரைதீவு மற்றும் கல்முனை போன்ற பகுதிகளில் பெருந்திரளான மக்கள் பங்களிப்புடன் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.
அந்தவகையில் காரைதீவு விளையாட்டு கழகமானது சித்திரை புத்தாண்டை முன்னிட்டும் தனது 40 வது ஆண்டு நிறைவை முன்னிட்டும் அதன் 25 வது மாபெரும் கலாச்சார விளையாட்டு நிகழ்வினை காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி மைதானத்திலும், கல்முனை இராவணா விளையாட்டுக் கழகமானது அக்கழக மைதானத்தை ஒட்டிய கடற்கரை திறந்தவெளிலும் மேற்குறித்த கலாச்சார விளையாட்டு நிகழ்வுகளை மிகப் பிரமாண்டமான முறையில் ஒழுங்குசெய்திருந்தன.
குறித்த இருவேறு இடங்களிலும் நடைபெற்ற நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வுகளை கண்டுகளித்திருந்தார்.
குறித்த நிகழ்வுகளின் போது விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், கிராம அபிவிருத்தி திணைக்கள மாகாண பணிப்பாளர் N.தனஞ்செயன், அம்பாறை மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் V.ஜெகதீஸன், காரைதீவு பிரதேச செயலாளர் S.ஜெகராஜன், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் J.அதிசயராஜ், காரைதீவு முன்னாள் தவிசாளர் K.ஜெயசிறில், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாணவ மீட்பு பேரவை தலைவர் கணேஸ், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி குமாரசிறி மற்றும் விளையாட்டு கழக உறுப்பினர்கள் பொது மக்களென பலரும் கலந்து கொண்டனரகலந்து கொண்டு நிகழ்வுகளை கண்டுகளித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ