“கைதிகளும் மனிதர்களே” மட்டக்களப்பு சிறைச்சாலைக்கான சிறப்பு விஜயம்

“கைதிகளும் மனிதர்களே” மட்டக்களப்பு சிறைச்சாலைக்கான சிறப்பு விஜயம்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்கள் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலைக்கான சிறப்புக் களவிஜயமொன்றினை முன்னெடுத்திருந்தார்.

குறித்த விஜயமானது கைதிகளுக்கான அடிப்படை வசதிகள் தொடர்பில் ஆராய்வது மற்றும் புதுவருட பிறப்பினை முன்னிட்டு அவர்களை மகிழ்ச்சிப் படுத்தும் முகமான அன்பளிப்பு பொதிகளை வழங்கிவைப்பது போன்றன தொடர்பில் அமைந்திருந்தது.

குறித்த விஜயத்தின் போது கைதிகளின் நன்மை கருதி சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்டுள்ள வெற்றிகாரமான வேலைத்திட்டங்கள் மற்றும் மாற்றங்கள் தொடர்பிலும் கைதிகளுக்கு மேலும் செய்து கொடுக்க வேண்டிய அடிப்படை ஆதாரவசதிகள் தொடர்பிலும் சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் கௌரவ தலைவருக்கு தெளிவுபடுத்தியிருந்தார். அதனை தொடர்ந்து அத்தியட்சகர் முன்னிலையில் கைதிகளுக்கான புத்தாண்டை முன்னிட்ட அன்பளிப்பு பொதிகளும் கௌரவ தலைவர் சிவ. சந்திரகாந்தன் மற்றும் தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் மகளீரணிச் செயலாளரும் முன்னாள் மாநகரசபை உறுப்பினருமான சுசிகலா அருள்தாஸ் போன்றோரினால் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த விஜயத்தின் பொது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான கௌரவ பூபாலபிள்ளை பிரசாந்தன், செயற்குழு உறுப்பினரும் முன்னாள் மாநகரசபை உறுப்பினருமான கந்தசாமி ரொனிபிரின்சன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவ

Video

சர்வதேச சைகை மொழி தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி!!

இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கான வெற்றிடம்