இராமர் தீவில் 244 ஏக்கர்களில் முன்னெடுக்கப்பட்ட பயிர்ச்செய்கையின் அறுவடைத் திருவிழா
ஆரம்ப காலகட்டங்களில் கோறளைப்பற்று வடக்கு கதிரவெளி புதூர் கிராமத்திற்கு அருகாமையிலுள்ள இராமர் தீவில் எமது மூதாதையர்கள் சிறிய அளவிலான மேட்டுநில பயிர்செய்கையினை முன்னெடுத்து வந்தனர். பின்னர் நிலவிவந்த யுத்த சூழ்நிலைகள் காரணமாக அப்பகுதி மக்கள் அத்தீவிற்கு செல்வதற்கான அனுமதிகள் மறுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அப்பிரதேச மக்கள் தமது வாழ்வாதாரத்திற்கென வெளிமாவட்டங்களில் கூலித்தொழிலின் நிமித்தம் அலைந்து அல்லலுற்றிருந்தனர்.
அம்மக்களின் கஸ்டங்களை தீர்க்கும் முகமாகவும் அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தச் செய்யும் முகமாகவும் அவ் இராமர் தீவில் சோளன் மற்றும் கச்சான் போன்ற மேட்டுநில பயிர்ச்செய்கைகளை பாரிய அளவில் முன்னெடுப்பதற்கான அனுமதிகளை கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்கள் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் தொடர்பு கொண்டு ஏற்பாடுசெய்திருந்தார்.
தற்பொழுது கிட்டத்தட்ட 1000 ஏக்கர் பரப்பளவினை கொண்ட இராமர் தீவில் சுமார் 244 ஏக்கர்களில் 67 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பயிர் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். நாங்கள் நினைப்பது போன்று இன்னும் 300 தொடக்கம் 400 ஏக்கர் அளவிலான காணிகளில் பயிர்செய்கைக்கென அப்பகுதி மக்களை ஊக்கப்படுத்தமுடியுமென நம்புகின்றோம். இதன் மூலம் எமது மாவட்டத்தின் உற்பத்தியினை அதிகரிக்க முடிவதுடன் பொருளாதாரத்தில் மேம்பட்ட சமூகமாக அச் சமூகத்தினை கட்டியெழுப்பவும் முடியும்.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ