சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேற்று வெற்றிக்கு இவைகளே காரணம் - கௌரவ பூ. பிரசாந்தன்
நேற்றைய தினம் மட்டக்களப்பு வலய கல்வி பணிமனைக்கு சென்று வலய கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமாரை வாழ்த்திய போதே தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொது செயலாளர் கௌரவ பூ. பிரசாந்தன் இக்கருத்தினை தெரிவித்திருந்தார்.
ஆரம்பத்திலிருந்த மட்டக்களப்பு கல்வி வலயமானது இரண்டாக பிரிக்கப்பட்டு மட்டக்களப்பு வலயம், மட்டக்களப்பு மேற்கு வலயம் என இரு வலயங்கள் உருவாக்க பட்டு விசேட கவனம் செலுத்தப்பட்டமையே இன்றைய சாதனைக்கு ஓர் இன்றியமையாத காரணியாக அமைகின்றது எனவும் அதனடிப்படையில் மட்டக்களப்பு கல்வி வலயமானது க. பொ. த சாதாரணதரப் பரீட்சையில் இலங்கையிலுள்ள 100 கல்வி வலயங்களுக்குள் முதலிடத்தையும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயமானது கடந்தவருடம் 88 வது இடத்திலிருந்து இவ்வருடம் 43 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறான மகத்தான சாதனையினை புரிந்த மாணவர்களையும் இதற்கென முன்நின்று உழைத்த கல்விப்பணிப்பாளர், அவருடன் இணைந்த குழாமினர், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவருக்கும் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சார்பிலும், கட்சி சார்பிலும் தெரிவித்திருந்தார்.
இவ்விஜயத்தின் போது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மகளிர் அணி செயலாளரரும் மாநகர சபை உறுப்பினருமான கௌரவ திருமதி. சுசிகலா அருள்தாஸ், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் கௌரவ. சாரதாதேவி, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சின் செயற்குழு உறுப்பினர் திரு கமல்ராஜா மற்றும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ