தற்பொழுது கௌரவ அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
குறித்த விஜயமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற பல மில்லியன் பெறுமதியான முற்றுப்பெறாத அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்பார்வை செய்யும் முகமாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் நாடுபூராகவும் உள்ள கிராமிய விளையாட்டு மைதானங்களை புனரமைக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்படும் விளையாட்டு மைதானங்களை மேற்பார்வை செய்தல் மற்றும் மட்டக்களப்பில் உள்ள விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பாக விவசாயிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுதல் மற்றும் மட்டக்களப்பு பகுதியில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுகாதார பிரிவிற்கென அமைக்கப்படும் கட்டிடத் தொகுதியின் வேலைகளை துரிதப்படுத்துதல், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவினை உயர் ஆற்றல் கதிர்வீச்சுடன் கூடிய உயர்தர கதிரியக்க சிகிச்சை நிலையமாக முன்னெடுப்பது, செங்கலடி புன்னக்குடா போன்ற பகுதிகளை பிரத்தியேக பூர்வ ஆடை உற்பத்தி மற்றும் அது தொடர்பான கைத்தொழில் வலையமாக பிரகடனப்படுத்தல் போன்ற முக்கிய விடயங்களை உள்ளடக்கியதாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ