கிரான் பிரதேசத்தில் விவசாயத்திற்கான சேதன வளமாக்கிகள் அறிமுகம்.

 

சௌபாக்கியா வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை வாரத்தினை முன்னிட்டு இறக்குமதி செய்யப்பட்ட சேதன வளமாக்கிகள் அறிமுகம். பசுமையான நாடு நஞ்சு விஷமற்ற நிரந்தர வீட்டுத் தோட்ட அபிவிருத்தி வேலைத் திட்டத்திற்கமைய முன்னெடுக்கப்படும் சௌபாக்கியா வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை வாரத்தினை முன்னிட்டு இவ்வாரம் கிரான் கமநல சேவைகள் திணைக்களத்திலும் பல நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதில் குறிப்பாக கிரான் பிரதேசத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட கற்றல் செயற்பாடுகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற விவசாயிகளின் பிள்ளைகளுக்கு புலமை பரிசில் திட்டங்கள், துவிச்சக்கர வண்டிகள், காசோலைகள் போன்றவற்றை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தனவர்கள் வழங்கி வைத்ததுடன் நஞ்சற்ற உணவு உற்பத்தியினை மேம்படுத்தும் முகமாக தெரிவுசெய்யப்பட்ட வீட்டுதோட்டச்செய்கையில் ஆர்வமுள்ள குடும்பங்களுக்கான விதைப் பொதிகளையும் வழங்கி வைத்திருந்தார். அத்துடன் சேதனபசளை பயன்பாட்டு ஊக்குவிப்பு திட்டத்திற்கமைய இராசயன வளமாக்கிகளுக்கு பதிலாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள iffco nano nitrogen சேதன வளமாக்கிகளையும் விவசாயிகளுக்கு அறிமுகம் செய்து வைத்ததுடன் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கான ஏனைய சேதன பசளைகளையும் வழங்கி வைத்திருந்தார். குறித்த நிகழ்வுகளின் போது மாவட்ட அரசாங்க அதிபர், கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர், தேசிய உரசங்கத்தின் பணிப்பாளர், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் விவசாயிகள் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்