எம்மால் அமைக்கப்பட்ட பேத்தாழை பொது நூலகத்தின் 10 வது ஆண்டு நிறைவு விழா.
கௌரவ தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் அமைக்கப்பட்ட பேத்தாழை பொது நூலகத்தின் 10 வது ஆண்டு நிறைவு விழா. ஒரு நூலகம் திறக்கப்படும்போது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன. அந்த வகையில் தான் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் சின்னவத்தை, பாலையடிவட்டை, சங்கர்புரம்,களுமுந்தன்வெளி உள்ளடங்கலாக 18 ற்கு மேற்பட்ட இடங்களில் நூலகங்களை அமைத்திருந்தாலும்கூட பேத்தாழை கிராமத்தின் பொக்கிஷங்களில் ஒன்றாகவும் பண்பட்ட சமூதாயத்தின் அடையாளமாகவும் திகழும் பேத்தாழை பொது நூலகத்தினை கௌரவ தலைவரவர்கள் அமைத்தமை வரலாற்றில் ஒரு முக்கிய விடயமாகவே பார்க்கப்படுகின்றது. அந்தவகையில் பேத்தாழை பொது நூலகமானது அமைக்கப்பட்டு ஒரு தசாப்தங்கள் கடந்துள்ள நிலையில் அதன் பத்தாவது வருட நிறைவு விழா நேற்றைய தினம் கௌரவ தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. ''வீரம் விளைவது போர்க்களத்தில் ஆனால் ஈர இதயங்கள் பூப்பது புத்தகத்தில்'' என்பதனை நன்கு உணர்ந்தவர் என்ற வகையிலும் ''வாசிப்பும் வாசிப்பின் வழியே உருவாகின்ற சிந்தனைகளும் நம்மை பொதுவான நிலையிலிருந்து விடுவித்து சிறப்பானதொரு மேம்பாட்டிற்கு தூக்கிச் செல்கின்றன'' என்பதனை நன்கு அறிந்தவர் என்ற வகையிலும் தான் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஆசியாவின் மிகப் பிரமாண்டமான நூலகத்தினை கிழக்கு மண்ணின் அடையாளமாக மட்டக்களப்பு நகரில் அமைக்க வேண்டும் என தான் கண்ட கனவு அக்காலப்பகுதியிலே பாதியிலேயே இடைநிறுத்தப்பட்டுடிருந்தாலும் தான் சிறைச்சாலையிலிருந்து மீண்ட நாள் முதல் அக்கனவை நனவாக்க அரும்பாடுபட்டு வருவது யாவரும் அறிந்த உண்மை. மிக விரைவில் முழுமையாக அந் நூலக வேலைகளையும் கௌரவ தலைவரவர்கள் முடித்து மக்கள் பாவனைக்காக கையளிப்பார் என்பதில் எந்தவித ஐயப்பாடுகளும் இல்லை.