வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைப் பிரிவு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா நோய்த் தாக்கம் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் நோயாளர்களை பாதுகாப்பதற்கென பல நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமாகிய கௌரவ சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனடிப்படையில் இன்றைய தினம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் கோரோனா சிகிச்சைப் பிரிவு நிலையத்தினை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர் கௌரவ சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் கௌரவ இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாளேந்திரன் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் கே.கருணாகரன், மட்/போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கம், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி நா.மயூரன், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், சுகாதார அதிகாரிகள், வைத்தியர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.