10MW(மெகாவாற்று) சூரிய மின்சக்தி நிலையம்
வருடாந்த மின் உற்பத்தியில் 20GWH மின்சாரத்தைப் பிறப்பிக்க கூடிய 10MW சூரிய மின்சக்தி நிலையத்தினை இன்றைய தினம் எமது மட்டு மண்ணின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நாவற்காடு கிராமத்தில் கௌரவ மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேயசேகர அவர்களின் கரங்களினால் திறந்து வைத்திருந்தோம்.
தற்போது நமது நாடு எதிர்கொண்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு அதனுடன் இணைந்த மின் துண்டிப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு பல மாற்று மின் உற்பத்தித் திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்த முற்படும் இத்தருணத்தில் பொறுப்புமிக்க அரசாங்கத்தின் பங்குதாரர் என்ற வகையில் இச் சூரிய மின்சக்தி நிலையத்தை நிறுவுவதற்கு தேவையான நில ஒதுக்கீடு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை எமது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் ஒழுங்கு செய்து வழங்கியிருந்தார்.
குறிப்பாக இச் சூரிய மின்சக்தி நிலையமானது இலங்கையில் விவசாய செய்கையுடன் கூடிய முதலாவது சூரிய மின் சக்தி நிலையம் என்ற பெருமையினையும் பெறுகின்றது. இது போன்று இன்னும் பல சூரிய மின்சக்தி நிலையங்களை எமது பகுதியில் நிறுவுவதற்கு தேவையான பல முன்மொழிவுகளை கௌரவ மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அவர்களிடம் எமது கட்சியின் கௌரவ தலைவர் கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்கள் முன்மொழிந்துள்ளார். மிக விரைவில் அவற்றையும் திறந்துவைத்து நாட்டினுடைய மின்சார உற்பத்திக்கும், மின் துண்டிப்பில்லாத ஒரு நாட்டினை கட்டியெழுப்புவதற்கும் அவராலான முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளார். இந் நிகழ்வின் போது நாவற்காடு நாமகள் தேசிய பாடசாலைக்கான ஸ்மார்ட்TV மற்றும் விளாவெட்டுவான் விநாயகர் வித்தியாலயம், கரவெட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் போன்றவையும் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் எமது நாட்டிற்கும் மக்களுக்கும் பயனுள்ள இப்பாரிய முதலீட்டு திட்டத்தினை முன்னெடுத்துள்ள Wind Force, Vidu Lanka & Hi Energy நிறுவனத்தினருக்கும் எமது நன்றிகளும் பாராட்டுக்களும்.
குறித்த சூரியமின்உற்பத்தி நிலையமானது பின்வரும் சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக மிகப்பிரமாண்டமான முறையில் அமையப்பெற்றுள்ளது.
* Equipped with 243 single Axis Trackers
* 18,676 Solar PV Modules
* 47 Inverter
* 4 Smart Transformer Station
* 20 GWh Annually
* Reduction of 15.000 MT CO2 Emissions