கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம்
கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார். குறித்த விஜயமானது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடபட்டதற்கமைய மாவட்டத்தின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் பாரியளவிலான இறால், நண்டு, மீன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகள் தொடர்பான கள விஜயமாக அமையவுள்ளது. அத்துடன் நீரியல் சார் உற்பத்தி பொருட்களை பாதுகாப்பான முறையில் களஞ்சியபடுத்தும் முகமாகவும் சந்தைப்படுத்தும் முகமாகவும் இனங்காணப்பட்ட முக்கிய இடங்களில் ஐஸ் உற்பத்தி நிலையங்களை திறப்பது தொடர்பாகவும் ஆர்வமுள்ள முதலீட்டாளர்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் உபகரணங்களை ஒழுங்கு செய்து வழங்குவது தொடர்பாகவும் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த வேலைத்திட்டங்கள் மூலமாக தொழில் வாய்ப்புக்களை அதிகரித்தல்,உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை மேம்படுத்தி தனிநபர் வருமானத்தினை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.