தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் கத்தார் நாட்டிற்கான அயலக உறவுக்கிளை நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
தாயகத்தில் வாழும் எம் இனத்தின் இருப்பினையும் அரசியல் பலத்தினையும் உறுதிப்படுத்தும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அடுத்த கட்ட பயணமாக வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் அயலக உறவுகளிடையே கட்சிக்கொள்கையினையும், பணிகளையும் விரிவுபடுத்தி அவர்களின் ஆதரவுகளையும், ஆலோசனைகளையும் பக்கபலமாக கொண்டு எமது சமூகத்தின் வளமான எதிர்கால சந்ததியினை கட்டியெழுப்பும் முயற்சியின் தொடர்ச்சியாக மத்தியகிழக்கு நாடுகளுள் ஒன்றான கத்தார் நாட்டிற்கான அயலக உறவுக்கிளை அங்குரார்ப்பன நிகழ்வு நேற்றைய தினம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்டஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தனவர்கள் தலைமையில் ஜூம் காணொளி மூலமாக இடம்பெற்றது.
குறித்த கத்தார் நாட்டின் அயலக உறவுக்கிளை பிரதம ஒருங்கிணைப்பாளராக திரு. கலாபமையில் கமலேஸ்வரன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கௌரவ சிவநேசத்துரை சந்திரகாந்தனவர்கள் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
குறித்து நிகழ்வுகளின்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன், மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அயலக உறவு பணிப்பாளரும் ஊடக செயலாளருமான மதி குமாரதுரை, கட்சியின் அரசியல் ஆலோசகர் ஸ்டாலின் ஞானம் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மிக விரைவில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஏனைய ஐரோப்பிய, கனேடிய, அமெரிக்க நாடுகளுக்கான அயலக உறவுக்கிளை அங்குரார்ப்பன நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.