3943 இலத்திரனியல் உபகரணங்கள்(டப்) பின்தங்கிய பிரதேச மாணவர்களுக்கென வழங்கியுள்ளோம்.
கல்வி என்பது அனைவருக்கும் சொந்தமான ஒரு விடயம் என்பதற்கிணங்க தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் பிள்ளைகள் வீட்டில் இருந்தே தமது கல்வி நடவடிக்கைகளை இணையத்தின் வாயிலாக முன்னெடுக்க வேண்டியுள்ளது. இவ்வாறு இணைய வழிக் கல்வியை பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் உள்ள எமது மாவட்டத்தினைச் சேர்ந்த பின்தங்கிய பிரதேச மாணவர்களுக்கென 3, 943 இலத்திரனியல் சாதனங்கள் வழங்கப்படவுள்ளது.
இதன் ஆரம்ப கட்டமாக நேற்றையதினம் வெல்லாவெளி, குறிஞ்சாமுனை, சித்தாண்டி ஆகிய பிரதேசங்களிலும் மட்/ மெதடிஸ்த மத்திய கல்லூரியிலும் இவ் இலத்திரனியல் சாதனங்கள் வழங்கிவைக்கப்பட்டது. மிக விரைவாக தெரிவுசெய்யப்பட்ட ஏனைய மாணவர்களுக்கும் இவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னேடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வின்போது கௌரவ இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் உட்பட அந்தந்த பிரதேசங்களைச் சேர்ந்த வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.