கல்குடா சுங்கான்கேணி வலம்புரி விநாயகர் வித்தியாலய பெயர் பலகை திறப்பு விழா!
மட்டக்களப்பு கல்குடா சுங்கான்கேணி வலம்புரி விநாயகர் வித்தியாலய பெயர் பலகை திறப்பு விழாவும், வித்தியாலய பரிசளிப்பு விழாவும் அதிபர் திரு.த.கேந்திரராஜா தலைமையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பாடசாலை பெயர்ப்பலகையினை திறந்து வைத்ததோடு சாதனையாளர்களுக்கான வெற்றி கேடயங்களையும், பரிசில்களையும் வழங்கி கௌரவித்திருந்தார்.
இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தன் அவர்களின் பரிந்துரைக்கமைய குறித்த பாடசாலையானது க.பொ.த உயர்தரம் வரை தரமுயர்த்த பட்டுள்ளதுடன் இப்பாடசாலையின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு புதிய பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வலயக்கல்வி பணிப்பாளர் த.ஆனந்தரூபன், பிரதி கல்வி பணிப்பாளர் நிர்வாகம் திருமதி றிஸ்மியா பானு, பிரதி கல்வி பணிப்பாளர் கல்வி அபிவிருத்தி ந.நேசகஜேந்திரன், பிரதி கல்வி பணிப்பாளர் திட்டமிடல் சி.இதயகுமார், பிரதி கல்வி பணிப்பாளர் முகாமைத்துவமும் தாபனமும் சி.தயாசீலன், கோட்டக்கல்வி பணிப்பாளர் அ.ஜெயக்குமணன், கட்சியின் மாவட்ட அமைப்பாளர் அருண் திருநாவுக்கரசு, முன்னாள் அதிபர் மு.மகேந்திரன், ஆசிரிய ஆலோசகர் அ.சந்திரகாந்தன் உட்பட பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், கிராம சேவை உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், ஸ்ரீ வலம்புரி சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு மற்றும் ஆலய நிர்வாக சபையினர்,விளையாட்டு கழக உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.