600 மில்லியன் செலவில் மட்டக்களப்பு திருமலை வீதி செப்பனிடுதலுக்கான ஆரம்ப நிகழ்வு.
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களின் கருத்திட்டத்திற்கமைய 800 மில்லியன் செலவில் மட்டக்களப்பு திருகோணமலை வீதியினை செப்பனிடுதலுக்கான ஆரம்ப நிகழ்வானது நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது,
இதன்போது இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தன் அவர்களின் அழைப்பையேற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விசேட விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன மற்றும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தன் இணைந்து குறித்த வீதியின் ஆரம்ப பணிகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்திருந்தனர்.
கடந்த கால அசாதாரண சூழ்நிலையின் போது நேரடி பாதிப்பிற்குள்ளாகி பல்வேறு வகையிலும் அனைத்து வளங்களையும் இழந்து மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்பட்டுவந்த வாகரைப் பிரதேசத்தின் ஊடாக மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களை இணைக்கும் இவ் வீதியின் செப்பனிடப்படாமல் உள்ள பகுதிகளை முழுமையாக செப்பனிடுவதன் ஊடாக அப்பிரதேசத்திட்கான போக்குவரத்துக்கள் மேலும் இலகுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் திரு. ரஞ்சித் ரூபசிங்க, கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. ஜீவானந்தம்,வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் திரு. சூரிய பண்டார, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சமிந்த அத்துலுவகே, கட்சியின் பிரதித்தலைவர் நாகலிங்கம் திரவியம், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் திரு. சிவகுமார், கட்சியின் பொதுச் செயலாளர் பூ. பிரசாந்தன் கல்குடா தொகுதி அமைப்பாளர் ஜினித்திரராசா, பிரதேச குழு தலைவர் மதிவேந்தன் உட்பட கட்சியின் பிரதேச மற்றும் கிராமிய குழு நிர்வாகிகள், கிராம மட்ட அமைப்புகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.