43 மில்லியன் செலவில் செப்பனிடப்பட்ட வெல்லாவெளி சங்கர்புரம் பாடசாலை வீதி

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன் அவர்களின் 43 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கொங்கிறீட் வீதியாக செப்பனிடப்பட்ட சங்கர்புரம் பாடசாலை வீதியானது மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வானது அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த வீதியை மக்கள் பாவனைக்கு கையளித்திருந்தார்.

போரதீவுபற்று பிரதேசத்தின் ஊடாக அம்பாறை ராணமடு கிராமத்தை இணைக்கின்ற மிக முக்கிய போக்குவரத்து பாதையாக காணப்படும் 1KM நீளமான குறித்த வீதியினை செப்பனிட்டு தருமாறு அப்பிரதேச மக்கள் இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் அவர்களிடம் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் குறித்த வீதியானது முன்னுரிமை அடிப்படையில் செப்பனிடப்பட்டுள்ளது.

இதன்போது சங்கர்புரம் விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் அப்பாடசாலையில் நிலவும் வளப்பற்றக்குறைகள் தொடர்பில் ஆராய்ந்திருந்ததோடு, அதிபர் உள்ளிட்ட பாடசாலை நிர்வாகிகளுடன் விசேட கலந்துரையாடளிலும் ஈடுபட்டிருந்தார்.

இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர் வாதுளன், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ரவீந்திரன், சங்கர்புரம் விக்னேஸ்வரா வித்தியாலய அதிபர் சபேசன், கட்சியின் பிரதிச் செயலாளர் (இணைப்பாகம்) வை. சந்திரகுமார், போரதீவுப்பற்று பிரதேச குழு செயலாளர் பிரசாத், இணைப்பாளர் கருணைராஜன், கட்சியின் கனடா கிளை இணைப்பாளர் கண்ணன், உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்