விசேட தேவையுடைய பாடசாலை மாணவிக்கான அடிப்படை வசதிகள் நிர்மாணித்து கையளிப்பு!

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன் அவர்களின் பிரத்தியேக நிதி பங்களிப்பின் ஊடாக ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட களுவன்கேணி கிராமத்தில் விசேட தேவையுடைய பாடசாலை மாணவி ஒருவரின் வீட்டிற்கான குளியலறை மற்றும் மலசலகூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிர்மாணித்து கையளிக்கப்பட்டுள்ளது .

அந்த வகையில் இராஜாங்க அமைச்சரின் பணிப்புரைக்கமைய குறித்த மாணவியின் இல்லத்திற்கு நேரில் சென்றிருந்த  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் அருண் திருநாவுக்கரசு, பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிர்மாண பணிகள் தொடர்பில் அராய்ந்திருந்ததோடு ஏனைய வள பற்றாக்குறைகளை தொடர்பிலும் கேட்டறிந்திருந்தார்.  

கடந்த மே மாதம் 02 ஆம் திகதி வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக  இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தன் கலந்து கொண்டிருந்த வேளை குறித்த மாணவியை எதேர்ச்சயாக சந்தித்திருந்ததுடன் அவரின் தேவைகள் தொடர்பாகவும் வினவியிருந்தார்.      

அதன் அடிப்படையில் குறித்த மாணவியினால் மேற்படி அடிப்படை வசதி பற்றாக்குறை தொடர்பில் இராஜாங்க அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்ததன் அடிப்படையில் இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக நிதி பங்களிப்பின் ஊடாக மேற்படி வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளமை          குறிப்பிடத்தக்கது.

Video

ஏனைய செய்திகள்