வாழைச்சேனை புதுக்குடியிருப்பு கலை வாணி கலைமன்றத்தின் கௌரவிப்பு விழா!

வாழைச்சேனை புதுக்குடியிருப்பு கலை வாணி கலை மன்றத்தின் 55ம் ஆண்டு நிறைவு விழாவும், கலை கலாசார கௌரவிப்பு நிகழ்வும்!

வாழைச்சேனை புதுக்குடியிருப்பு கலை வாணி கலை மன்றத்தின் 55ம் ஆண்டு நிறைவு விழாவும், கலை கலாசார கௌரவிப்பு நிகழ்வும் அதன் தலைவர் சு.டிலக்ஷன் தலைமையில் புதுக்குடியிருப்பு கலை வாணி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வுகளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்ததோடு, சாதனையாளர்களுக்கான வெற்றிக் கேடயங்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவித்திருந்தார்

இதன் போது கலை வாணி கலைக்கழகத்தின் 55வது ஆண்டு நிறைவின் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றதோடு கல்வி, கலை கலாச்சாரம் மற்றும் விளையாட்டு துறைகளில் சாதனை படைத்த சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், சின்னஞ்சிறார்களின் நடன நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் திரு எஸ்.நவநீதன்,

A.N.K ஷாலினி கடல் உணவு மையம் உரிமையாளர் திரு ஆ. பன்னீர்செல்வம் சமூக சேவையாளர் திரு. வில்சன் சுதாகர், கிராம சேவை உத்தியோகத்தர் திரு.வரதராஜன், புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலய அதிபர் திரு. விஜயகரன்,வாழைச்சேனை கோறளைப் பற்று ப.நோ.கூ தலைவர் நாகராசா உட்பட கிராம மட்ட அமைப்புக்களின் நிர்வாகிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்