18 மில்லியன் செலவில் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவில் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைப்பு ..
18 மில்லியன் செலவில் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவில் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைப்பு
அண்மையில் மாவட்டம் பூராகவும் தொடர்ச்சியாக பதிவாகிய கன மழையினால் வாழ்வாதாரத்தை இழந்த தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சுய தொழில் மேம்பாட்டுக்கான வாழ்வாதார உபகரணங்கள் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவிலும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கெளரவ சிவ.சந்திரகாந்தன் அவர்களினால் சுமார் 18 மில்லியன் பெறுமதியான வாழ்வாதார உபகரணங்கள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.
குறிப்பாக 22 பயனாளிகளுக்கு 6 லட்ஷம் பெறுமதியான கோழிக்கூடுகளும், 7 பயனாளிகளுக்கு நீர்ப்பம்பி, கம்பி வலை உள்ளிட்ட வாழ்வாதார உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .
இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் J. J. முரளிதரன், பிரதேச செயலாளர் திருமதி.சத்தியானந்தி, உதவிப் பிரதேச செயலாளர் சுபசதாகாரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் A.சபேஸ், கச்சேரி பிரதி திட்டமிடல் பணிப்பாளர் நிர்மல்ராஜ் மற்றும் பயனாளிகள், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.