கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிண்ணையடி உள்ளக வீதிகள் காப்பெட் வீதியாக செப்பனிடும் பணிகள் ஆரம்பம்

கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிண்ணையடி கிராம சேவையாளர் பிரிவில் 1.5km நீளமான உள்ளக வீதிகள் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திரகாந்தனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் காப்பெட் வீதியாக செப்பனிடும் பணிகளை

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் நவரத்தினம் திருநாவுக்கரசு நேற்றையதினம் ஆரம்பித்து வைத்திருந்தார்.

இதன்போது கோறளைப்பற்று முன்னால் தவிசாளரும் கோறளைப்பற்று அமைப்பாளருமான சோபா ஜெயரஞ்சித் மற்றும் கிராமியக்குழு உறுப்பினர்கள்,கட்சியின் முக்கியஸ்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Video

ஏனைய செய்திகள்