மட்/ஆரையம்பதி மகா வித்தியாலய உள்ளக வீதி திறந்து வைப்பு.
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் அவர்களுக்கு மட்/ஆரையம்பதி மகா வித்தியாலய நிர்வாகத்தினர் பாடசாலை உள்ளக வீதிகளை செப்பனிட்டுத் தருமாறும் இதனால் மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக அண்மையில் அதற்கான களவிஜயத்தினை இராஜாங்க அமைச்சரின் ஆலோசனைக்கமைவாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூ.பிரசாந்தன் முன்னெடுத்திருந்ததுடன் உள்ளகவீதி செப்பனிடுவதற்கான வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
தற்பொழுது குறித்த செப்பனிடும் பணிகள் முற்றுப்பெற்ற நிலையில் இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் உள்ளகவீதியினை சம்பிரதாய பூர்வமாக நேற்றையதினம் திறந்து வைத்திருந்தார்.
மட்/ஆரையம்பதி மகா வித்தியாலய அதிபர் S.நந்தகோபால் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாணக்கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் N.சத்தியானந்தி, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாண பணிப்பாளர் எந்திரி கே. சிவகுமார், பிரதம எந்திரி பி.பரதன், நிறைவேற்றுப் பொறியியலாளர் எந்திரி லிங்கேஸ்வரன், மட்டக்களப்பு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் K.ஹரிகராஜ் உட்பட முக்கியஸ்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.