242 மில்லியன் செலவிலான மூக்கறையான் ஓடை பாலத்திற்கான அடிக்கல் நடலும், பாலையடித்தோணா பிரதான வீதி, செங்கலடி வீதிச் சமிக்ஞை விளக்கு, செங்கலடி ரமேஸ்புர வீதி போன்றன திறந்துவைப்பும்.

242 மில்லியன் செலவில் முன்னெடுக்கப்படவுள்ள எமது மூத்த ஆதிக்குடிகள் வாழ்ந்துவந்த மிகப்பெரும் பழங்கிராமங்களான அக்குறானை, முறுத்தானை, பள்ளத்துச்சேனை, வடமுனை போன்ற எல்லைப்புற கிராமங்களை கோறளைப்பற்று நகர்ப்புறங்களுடன் இணைப்புச்செய்யும் மூக்கறையான் ஓடை பாலத்திற்கான வேலைகளை நேற்றையதினம் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கௌரவ Dr பந்துல குணவர்த்தன அவர்களுடன் இணைந்து கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான கெளரவ சிவ.சந்திரகாந்தன் அவர்கள் திறந்து வைத்திருந்தார்.

அதனுடன் இணைந்ததாக 2 km நீளமான சந்திவெளி பாலையடித்தோணா பிரதான வீதி,செங்கலடி முற்சந்தி சமிக்ஞை விளக்கு, 1.5 km நீளமான செங்கலடி ரமேஸ்புர வீதி என்பவற்றையும் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தனர்.

குறித்த நிகழ்வுகளின் போது வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் சிவகுமார், பிரதேச செயலாளர்கள்,உள்ளுராட்சி மன்றங்களின் ஆணையாளர்கள், செயலாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிறைவேற்று பொறியியலாளர் லிங்கேஸ்வரன் , தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான கௌரவ. பூ.பிரசாந்தன், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் இணைப்பு செயலாளர் மாணிக்கவாசகர் தயாபரன், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் பிரத்தியேக செயலாளர் தம்பிராஜா தஜிவரன், மாவட்ட பொலிஸ் உயரதிகாரிகள், ஏனைய திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்