" மட்டக்களப்பில் பொலிவு பெறும்பொதுசன நூலகம்" நூல் வெளியீட்டு விழா.
சந்திரோதயம் கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் கலை இலக்கிய வட்டம் ஆகியன இணைந்து நடாத்திய நூலியலாளர் என்.செல்வராஜாவின் "மட்டக்களப்பில் பொலிவுபெறும் பொதுசன நூலகம்" நூல் வெளியீட்டு விழாவானது எழுத்தாளரும் அதிபருமாகிய ச. மணிசேகரன் தலைமையில் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது.
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பேராசிரியர். சி.மௌனகுரு அவர்களும் கௌரவ விருந்தினராக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ சிவ .சந்திரகாந்தன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
நூல் அறிமுகத்தினை கவிஞர்.த.உருத்திராவும், நூல் நயவுரையினை சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் க.மோகனதாசன் அவர்களும் சிறப்புரையினை இன் நிகழ்வின் மூத்த ஊடகவியலாளர் பூ.சீவகன் அவர்களும் வழங்கியிருந்தனர்.
இதன்போது பேராசிரியர் சி.சந்திரசேகரம்(கிழக்குப் பல்கலைக்கழகம்), பேராசிரியர் பாலசுகுமார் (லண்டன்), மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எந்திரி. என்.சிவலிங்கம், சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவன பணிப்பாளர் திருமதி. பாரதி கென்னடி,
சிரேஷ்ட்ட விரிவுரையாளர் திரு. க. மோகனதாசன், கிழக்கு பல்கலை கழக சிரேஷ்ட்ட உதவி நூலகரும் இலங்கை நூலக சங்க துணைத்தலைவருமான திரு. செ. சாந்தரூபன், ஊவாவெல்லச பல்கலைக்கழக நூலகர் கலாநிதி. து. பிரதீபன், மாநகரசபை உதவி ஆணையாளர் சிவராஜா, ஓய்வு நிலை வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் பொறியியலாளர் பத்மராஜா, ஓய்வு நிலை மாவட்ட கல்வி பணிப்பாளர் S. S. மனோகரன், பொறியியலாளர் இளங்கோ, ஆய்வாளர் என்.சரவணன்(நோர்வே), எழுத்தாளர் கவிஞர் செ.குணரெத்தினம், ஓய்வு நிலை அதிபர்கள் உட்பட எழுத்தாளர்கள், ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.