''காரிகைக் கனவு'' விருது விழா இராஜாங்க அமைச்சரின் பங்கேற்புடன்
கோறளைப்பற்று பேத்தாளை வளம்சேர் வாளையூர் கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கலை நிபுணர்களை கௌரவிக்கும் முகமாக ''காரிகைக் கனவு 2023'' எனும் விருது வழங்கும் நிகழ்வும் அதனுடனிணைந்த ஆடை அலங்கார அணிவகுப்பும் நேற்றைய தினம் பேத்தாளை குகநேசன் கலாச்சார மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வில் வாளையூர் கலைச்சங்கத்தின் அழைப்பினை ஏற்று கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.
இதன்போது காரிகை கனவு விருதானது அழகுக்கலை நிபுணர்கள், அழகுகலை ஒப்பனையாளர்கள், கேக் வடிவமைப்பாளர்கள், ஆரி தொழிலாளர்கள் (aari workers),மெஹந்தி ஆர்டிஸ்ட், ஆயுள்வேத துறை சார்ந்தவர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் என பல்வேறு துறைகளைச் சார்ந்த 47 கலை நிபுணர்களுக்கு இராஜாங்க அமைச்ர் கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்கள் விருதுகளை வழங்கி வைத்திருந்ததுடன் அதன் போது இடம்பெற்ற ஆடை அலங்கார அணி வகுப்பினையும் கண்டுகளித்திருந்தார்.
குறித்த நிகழ்வில் மட்டகளப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா, மட்டகளப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார், வாழைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் அமலினி கார்த்தீபன் , கல்குடா வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் சுபா சந்திரன், வாழைச்சேனை பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட பல்வேறு துறைசார் கலை நிபுணர்கள், கலை துறை ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.