சேம்பையடி ஆற்றுக்கு குறுக்காக புதிய பாலம் மற்றும் மதகுகள் அமைத்தல் தொடர்பில்.

கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட சேம்பையடி ஆற்றுக்குக் குறுக்காக பாலம் அமைப்பது தொடர்பிலும் தற்போதுள்ள ஒற்றையடி பாலத்தின் மதகுகளை திருத்துதல் தொடர்பிலுமான விசேட களவிஜத்தினை கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்கள் முன்னெடுத்திருந்தார்.

குறித்த சேம்பையடி ஆறானது வாகனேரி நீர்ப்பாசன திட்டத்திலிருந்து பாயும் ஓர் ஆற்றுக்கிளையாகும். குறித்த ஆற்றுக்கிளையானது சேம்பையடி ஒற்றையடிப் பாலத்திலுள்ள மதகுகள் மூலமாக மறிக்கப்பட்டு பிரம்படித்தீவு தொடக்கம் புலிபாய்ந்தகல் வரையிலான பட்டிபோட்டமடு, பூலாக்காடு, அரசையடிக்குடா, முதலாம் கண்டம், இரண்டாம் கண்டம், கையாட்டி மதுரைக் கண்டம், உட்பட பல கண்டங்களைச் சேர்ந்த ஏறக்குறைய 5000 ஏக்கர் வரையிலான வயல் காணிகளுக்கு நீர் பாய்ச்சப்படுகின்றது.

குறித்த சேம்பையடி ஒற்றையடி பாலத்திலுள்ள மதகுகளின் பாவனைக்காலம் முடிவடைந்து பழுதடைந்த நிலையில் காணப்படுவதனால் அம்மதகுகளை மாற்றம் செய்வது தொடர்பிலும், நிலத் தொடர்பற்று குறித்த நீர் நிலையினால் தனிக் கண்டமாக பிரிக்கப்பட்டுள்ள சாலம்பையடிக்காலை கண்டத்தினை பட்டி போட்ட மடுவுடன் இணைப்பதற்கான புதிய பாலத்தினை கனரக வாகனங்கள் சென்று வரக்கூடிய வகையில் அமைப்பதற்கான களவிஜயமாக குறித்த களவிஜயம் அமைந்திருந்தது.

குறித்த பாலத்தினை அமைப்பதன் மூலம் சாலம்பையடிக்காலை கண்டத்தில் காணப்படுகின்ற சுமார் 400 ஏக்கர் வயல்காணிகளில் வேளாண்மை செய்கையினை முன்னெடுக்கமுடியும்.

Video

ஏனைய செய்திகள்